உ.பியில் தனியாக போட்டியிட காங். முடிவு - 24 வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மாயாவதி முதல்வராக உள்ளார்.
மாயாவதியின் செல்வாக்கை சமாளித்து அதிக தொகுதிகளை வெல்ல, சேர்ந்து போட்டியிடலாம் என காங்கிரஸும், சமாஜ்வாடிக் கட்சியும் முடிவு செய்தன.
ஆனால், சமாஜ்வாடி கட்சி கூடுதல் சீட்களை கேட்டு வருகிறது. அதை விட முக்கியமாக பல தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அது தன்னிச்சையாக அறிவித்து விட்டது.
காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளைத்தான் சமாஜ்வாடியிடம் கேட்டது. ஆனால் அவ்வளவு தர முடியாது என்று கூறிய முலாயம் சிங், 62 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
இதனால் உ.பி. காங்கிரஸார் கடுப்பாகி விட்டனர். இனியும் முலாயமிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. தனித்தே போட்டியிடுவோம் என கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதன் மூலம் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த 24 பேர் பட்டியலில் சோனியா காந்தி (ரேபரேலி), ராகுல் காந்தி (அமேதி), ராஜ்பாபர் (பதேபூர்), சல்மான் குரேஷி (பரூக்காபாத்) ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும் இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை காங்கிரசும் முலாயமின் சமாஜ்வாடி கட்சியும் முறி்த்துக் கொள்ளவி்ல்லை. இந்தக் கூட்டணியைக் காக்க தீவிர முயற்சிகள் நடக்கின்றன.
கூட்டணி உறுதியானால் இரு தரப்பும் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் மாற்றங்கள் வரலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications