கருணாநிதியின் புகார்கள் - தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார் நரேஷ் குப்தா
சென்னை: முதல்வர் கருணாநிதி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை முதல்வர் கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையாக சாடியிருந்தார்.
வன்னியர் சொத்து நல வாரியம் குறித்து செய்தியை பத்திரிக்கைகள் போடக் கூடாது என்று கூறி தடுக்க முயன்றார் ... தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதை நரேஷ் குப்தா மறந்து விடக் கூடாது.. தமிழக அரசின் சம்பளத்தைத்தான் அவர் பெறுகிறார் ... மரியாதை நிமித்தமாக கூட என்னை வந்து அவர் சந்திக்கவில்லை என்று மிகக் காட்டமாக கூறியிருந்தார்.
இதற்கு நரேஷ்குப்தா பதிலளிக்கையில், வன்னியர் பொதுச் சொத்து நலவாரியத்தை மீண்டும் அமைத்து உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பை பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட வேண்டாம் என நான் யாரிடமும் சொல்லவில்லை. யாருக்கும் போன் செய்யவும் இல்லை.
எனக்கே, பத்திரிகைகள், டி.வி.களை பார்த்துத்தான் தெரியவந்தது.
தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்ற விதி உள்ளது. எனக்கும் யாரையும் போய் சந்தித்துப் பழக்கம் இல்லை.
கடந்த ஆட்சியின் போதும், தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்திக்கவில்லை.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியே நான் இப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளேன். எனது ஊதியத்தில் 50 சதவீதத்தை தமிழக அரசிடமிருந்தும், 50 சதவீதத்தை மத்திய அரசிடமிருந்தும் பெற்று வருகிறேன்.
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி மத்திய தேர்தல் கமிஷனுக்கு விரிவான அறிக்கை அனுப்புவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று கருணாநிதியின் புகார் குறித்த விளக்க அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார் நரேஷ் குப்தா.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications