காங்கிரஸுடன் கூட்டணி உடைந்து விட்டது - அமர்சிங்
டெல்லி: காங்கிரஸுடனான உறவு முறிந்து விட்டது. இதற்கு மேல் இதைக் கடுமையான வார்த்தைகளால் கூற நான் விரும்பவில்லை என்று சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார். இதன் மூலம் இரு கட்சிகளும் உ.பி. லோக்சபா தேர்தலில் தனித் தனியாக போட்டியிடவுள்ளது உறுதியாகியுள்ளது.
மன்மோகன் அரசு கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து அக்கட்சியுடன் நெருங்கி வந்தது சமாஜ்வாடிக் கட்சி. இதையடுத்து இரு கட்சிகளும் உ.பி. லோக்சபா தேர்தலிலும் கூட்டணி வைக்க முடிவு செய்தன.
ஆனால் சமாஜ்வாடி கட்சி திடீரென அதிக சீட்களைக் கேட்டு காங்கிரஸை நெருக்கடியில் ஆழ்த்தியது. அது மட்டுமல்லாது, 60க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து காங்கிரஸை கடுப்பாக்கியது.
இருப்பினும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சமாஜ்வாடியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்ததது. இதனால் சமாஜ்வாடி கட்சி அதிர்ச்சி அடைந்தது.
இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸுடனான கூட்டணி உடைந்து விட்டதாக அமர்சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தவிதமான கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்த நான் விரும்பவில்லை. கூட்டணி உடைந்து விட்டது.
காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளுக்கு எப்போது வேட்பாளர்களை அறிவித்ததோ அப்போதே கூட்டணிக்கான முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
மொத்தம் உள்ள 80 சீட்களில் காங்கிரஸ் கட்சிக்கு 17 வரை தர நாங்கள் முன்வந்தோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ 25 சீட்களுக்கும் கூடுதலாக எதிர்பார்த்தது.
கூட்டணி என்ற பெயரில், எந்தவொரு தேசிய கட்சியோ அல்லது பிராந்திய கட்சியோ, கூட்டணிக் கட்சி கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளை கேட்க முடியாது. ஆனால் சமாஜ்வாடி வெற்றி பெற்ற தொகுதிகளையெல்லாம் காங்கிரஸ் கேட்டது.
இருப்பினும் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்தும், அமேதி தொகுதியில், ராகுல் காந்தியை எதிர்த்தும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது.
கூட்டணி இருக்கிறதோ, இல்லையோ, இவர்களை எதிர்த்து நாங்கள் வேட்பாளர்களைப் போட மாட்டோம்.
நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மூன்று உறுதிமொழிகளை அளித்தோம். அரசைக் காப்பாற்றுவோம், அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற உறுதுணையாக இருப்போம் மற்றும் உ.பி. லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம் என்பதே அது. அதில் 3வது உறுதிமொழியை நிறைவேற்ற முடியாத நிலை. எங்களது விதியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆள் பார்த்து ஆதரவு...
எங்களது முக்கிய எதிரி பகுஜன் சமாஜ் கட்சிதான். எந்தத் தொகுதியிலாவது எங்களது வேட்பாளர் பலவீனமாகவும், காங்கிரஸ் வேட்பாளர் பலமானவராகவும் இருந்தால், நாங்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்போம்.
நாங்கள் வென்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தினால் அதேபோல நாங்களும் அவர்கள் வென்ற தொகுதிகளில் வேட்பாளர்களைப் போடுவோம். அலிகார், வாரணாசி போன்ற காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் எங்களது வேட்பாளர்களைப் போடுவோம்.
இந்த நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. இன்னும் நாங்கள் சோனியா காந்தியை மதிக்கிறோம் என்றார் அமர்சிங்.
கூட்டணி உடைந்து விட்டது என்றாலும் கூட, அமர்சிங்கின் பேட்டியைப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி மறைமுகமான உறவை தொடருவதாகவே தோன்றுகிறது. இருவருக்கும் பொது எதிரி மாயாவதி என்பதால், அவரது பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறுவதைத் தடுக்க ரகசியமான முறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவார்கள் எனவும் தெரிகிறது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications