போலீஸாரும் எல்லை மீறி நடந்து கொண்டனர் - ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையிலான மோதல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இதையடுத்து சென்னை வந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணை நடத்தினார். பின்னர் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கை நேற்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு வந்தது. அப்போது அறிக்கையை தலைமை நீதிபதி வெளியிட்டார்.
அதில் வக்கீல்கள் குண்டர்களைப் போலவும், விஷமிகளைப் போலவும் நடந்து கொண்டதாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதேசமயம், போலீஸாரும் தங்களது எல்லைகளை மீறி நடந்து கொண்டதாகவும் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையின் முழு விவரம் ...
நீதிபதிகளின் அணுகுமுறை தவறு ..
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பின்பற்றிய மென்மையான அணுகுமுறைதான் வன்முறைக்கு வழிவகுத்தது என்று முதல் பார்வையிலேயே தோன்றுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நிர்வாகத்தின் மெத்தன போக்கு, வக்கீல்களுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பியதுடன், அவர்கள் சட்டத்தை மீறும் வகையில் ஊக்கம் அளித்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இருந்து சாதி பிரச்சினைகள் வரையிலான அரசியல் பிரச்சினைகள், இந்த சூழ்நிலையை தீவிரப்படுத்தி விட்டன என்பதில் சந்தேகமே இல்லை. வக்கீல்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க கோர்ட் வளாகத்தை பயன்படுத்தக்கூடாது என்று ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
குண்டர்களைப் போல, விஷமிகளைப் போல ...
சென்னை ஐகோர்ட்டு நிர்வாகத்தின் மென்மையான அணுகுமுறையால் ஊக்கம் அடைந்த வக்கீல்கள், தாங்கள் கோர்ட்டு வளாகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு தப்பித்து விடலாம் என்று நினைத்து விட்டார்கள் போல தோன்றுகிறது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியவர்களாக இருப்பதற்கு மாறாக, அவர்கள் குண்டர்கள், விஷமிகளைப் போல செயல்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
தாங்கள் கோர்ட்டின் அதிகாரிகள் என்றும், தாங்கள் சட்ட நடவடிக்கைக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், எத்தகைய சட்ட விரோதமான செயலையும் செய்து விட்டு, போலீசாருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தப்பி விடலாம் என்றும் வக்கீல்கள் நினைத்து விட்டதுபோல் தோன்றுகிறது.
திட்டமிட்டு எல்லை மீறிய போலீஸார் ...
அன்றைய சூழ்நிலையில், பலப்பிரயோகம் செய்ய வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுவிட்டது சந்தேகத்துக்கு இடமற்ற நியாயமாக தோன்றினாலும், போலீசார் திட்டமிட்டு எல்லை மீறி பலப்பிரயோகம் செய்துள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களை ஒடுக்க தடியடி நடத்த உத்தரவு கிடைத்தவுடன், வக்கீல்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட லைசென்ஸ் கிடைத்து விட்டதாக போலீசார் நினைத்து விட்டது போல தோன்றுகிறது.
உயர்நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வேண்டும் என்றே வக்கீல்களையும் வக்கீல்களின் அறைகளை தாக்கியதுடன், அவர்களின் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்து இருக்கிறார்கள். கோர்ட்டின் தரைத்தளத்திலும், முதல் தளத்திலும் வக்கீல்களை விரட்டிச்சென்று இரக்கமின்றி அடித்துள்ளனர்.
கோர்ட்டு வளாகத்துக்குள் அடித்ததுடன் திருப்தி அடையாமல், வக்கீல்களின் சேம்பர்கள் வழியாக ஓடிச்சென்று திட்டமிட்டு சேதம் விளைவித்துள்ளனர். வக்கீல்கள் போல தோன்றியவர்களை எல்லாம் இழுத்துப்பிடித்து அடித்துள்ளனர். வெறி பிடித்த கூட்டம் போல, போலீசார் திட்டமிட்டு பலப்பிரயோகம் செய்துள்ளனர்.
கமிஷனர் மீது தவறில்லை ...
இந்த விவகாரத்தில் தனித்தனியாக ஒவ்வொரு வக்கீல்களையும், போலீசாரையும் முழுமையாக விசாரிக்கும் வரை, பிரச்சினைக்கு காரணமானவர்கள் யார் என்பதை குறிப்பாக கண்டுபிடிப்பது கடினம்.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்டதை அடுத்து, தலைமை நீதிபதியின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதப்படை போலீசாரை அனுமதித்தது தவறு என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை மன்னிக்கலாம்.
மோதல் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வக்கீல்களின் கோரிக்கையில் அடிப்படை ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. மாலை 5.14 மணிக்குத்தான் போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார். அதன்பிறகு எந்த ஒரு அதிகாரியும் கொடூரமாக நடந்து கொள்ளும்படி போலீசாருக்கு உத்தரவிட்டதாக உருப்படியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.
அறிக்கையை சமர்ப்பித்துள்ள நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, மேற்கொண்டு இந்த நீதி விசாரணையைத் தொடர விரும்பவில்லை என்றும் தலைமை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அறிக்கையை தலைமை நீதிபதி வாசித்து முடித்ததும், வக்கீல்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை போலீஸ் கமிஷனரை தற்காலிக நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வக்கீல் வாகன்வதி,
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில், கோர்ட் புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று வக்கீல்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்டு முடித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மோதல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றி உத்தரவிட்டார்.
3 நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்ற பெஞ்ச் இதை விசாரிக்க வேண்டும். அதுவே தீர்ப்பை அளிக்க வேண்டும். நீதி விசாரணை தொடர்பாக உயர்நீதிமன்ற பெஞ்சே முடிவு செய்யும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications