அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள வீட்டில் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மேற்கு கிளிவ்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை கண்டனர். அவர்களில் ஒரு குழந்தை மட்டுமே காயத்துடன் உயிர் தப்பியிருந்தது. மற்றவர்கள் பரிதாபமாக பலியாகி இருந்தனர்.
இதையடுத்து போலீசார் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் குற்றவாளியை தேடி வருகின்றனர். டேவன் கிராபோர்டு (33) என்பவனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இது குறித்து கிளிவ்லேண்ட் போலீஸ் லெப்டினன்ட் தாமஸ் ஸ்டேசோ கூறுகையில், பலியான நான்கு குழந்தைகளில் சில கிராபோர்டின் குழந்தைகளாக இருக்கலாம். துப்பாக்கி சூடு நடப்பதற்கு சற்று முன்னர் அந்த வீட்டில் இருந்த குழந்தை பக்கத்து வீட்டுக்கு சென்று அவர்களிடம் காப்பாற்றுமாறு கூறியுள்ளது என்றார்.
இது தொடர்பாக சிகாகோவிலிருந்து வெளிவரும் கிளிவ்லேண்ட் பிளைன் டீலர் என்று பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பலியான பெண் அந்த குழந்தைகளின் தாய். தேடப்பட்டு வரும் குற்றவாளி கிராபோர்டு கடந்த 2002ல் குடும்ப வன்முறை சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். அப்போது குழந்தைகளை துப்பாக்கியால் மிரட்டியுள்ளான் என செய்தி வெளியிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications