பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவும் விடுதலைப் புலிகள்
வன்னி: தங்களை நம்பி, தங்களுடனேயே இருக்கும் வன்னி மக்களை பட்டினிக் கொடுமையிலிரு்து காப்பாற்றும் பணியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர் விடுதலைப் புலிகள்.
வன்னியில் இலங்கை அரசின் தடைகளினால் பெரும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பட்டினி அவலத்தை தடுக்கும் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்கப்படுவதற்கான நிலையங்கள் அமைக்கப்பட்டு காலையில் பால் மாவு வழங்கப்படுவதுடன் கஞ்சி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு கஞ்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் சிறுவர்களுக்கு பயத்தம் பருப்பு கஞ்சியும் பெரியவர்களுக்கு உப்புக் கஞ்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், பட்டினி நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதே வேளையில் மக்களின் மிக அத்தியாவசிய தேவையான கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, கூடவே கிணறுகள் வெட்டும் பணியிலும் புலிகள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக மக்கள் வாழும் பகுதிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன.
ஆதரவற்று வீதிகளில் கைவிடப்பட்ட பசியால் வாடும் முதியவர்களும் உரிய வகையில் உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications