எஸ்.வி.சேகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - அதிமுகவினரா?

Subscribe to Oneindia Tamil

S.V.Sekhar
சென்னை: நடிகரும், மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் வீட்டில் நள்ளிரவில் சிலர் பெட்ரோல் பாட்டில்களை வீசி விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவை வெடிக்கவில்லை.

எஸ்.வி.சேகருக்கும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் இடையே இப்போது முன்பு போல சுமூக நிலை இல்லை. இதை எஸ்.வி.சேகரே வெளிப்படையாக பலமுறை கூறியுள்ளார்.

மேலும், சமீபத்தில் பிராமணர் நலனுக்காக தனி அமைப்பையும் தொடங்கினார் எஸ்.வி.சேகர். அதிமுக எம்.எல்.ஏ என்று அழைக்கப்பட்டாலும் கூட அதிமுகவுக்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையே இப்போது கிட்டத்தட்ட எந்த சம்பந்தமும் இல்லாத நிலைதான்.

இந்த நிலையில், நேற்று இரவு நாடகம் ஒன்றை முடித்து விட்டு வீடு திரும்பினார் சேகர். இரவு பத்தரை மணியளவில், அடையாளம் தெரியாத மூன்று பேர் அங்கு பைக்கில் வந்தனர்.

சேகரின் வீட்டுக்குள் பெட்ரோல் அடங்கிய பாட்டில்களை வீசி விட்டுத் தப்பினர். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் பாட்டிலகள் வெடிக்கவில்லை.

மூன்று பேர் வந்து பாட்டில்களை வீசியதை அருகில் உள்ள வீட்டின் வாட்ச்மேன் பார்த்து எஸ்.வி.சேகருக்குத் தகவல் தந்தார்.

இதையடுத்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் எஸ்.வி.சேகர்.

இந்த சம்பவத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிக் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெட்ரோல் பாட்டில்களை வீசியதைப் பார்த்த காவலாளியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகள் செய்த செயல் இது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+