தேர்தல்..ஜாதகம் பார்த்து சீட் தரும் ஜெயலலிதா!

இதனால் விண்ணப்பப் படிவத்துடன் தங்களது ஜாதகத்தையும் இணைத்துள்ளனராம் போட்டியிட விரும்பும் அதிமுக வேட்பாளர்கள்.
யாருக்கு 'நேரம்' சரியாக இருக்கிறதோ அவர்களுக்கே டிக்கெட் கிடைக்கும் எனத் தெரிகிறது. 'கட்டம்' சரியில்லாதவர்கள் கட்டம் கட்டி கழிக்கப்பட்டு விடுவார்களாம்.
ஜெயலலிதாவே ஜாதக நகல்களையும் விண்ணப்ப மனுவுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம். இதனால்தான் சீட் கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ள அதிமுகவினர் தங்களது ஜாகத்தையும் ஜெராக்ஸ் எடுத்து இணைத்துள்ளனராம்.
இந்த ஜாதகங்களைப் பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 6 ஜோதிடர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் குழு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் தான் ஜெயலலிதாவால் பரிசீலிக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
இதுகுறித்து டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ள ராஜன் என்பவர் கூறுகையில், அம்மாவுக்கு ஜோதிடம் மீது அபார நம்பிக்கை உண்டு என்பதை அனைவருக்கும் தெரியும்.
இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. எனவே எந்த வகையிலும் தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதில் அம்மா கவனமாக இருக்கிறார்.
கிரக நிலைகள் சரியாக இருப்பவர்களுக்கே சீட் என்ற முடிவில் அம்மா இருப்பதாக அறிகிறோம். அதனால்தான் ஜாதக நகலையும் கேட்டுள்ளனர்.
பிறந்த தேதி, எந்த நேரத்தில் பிறந்தனர் என்பதையும் அம்மா முக்கியமாக கவனிக்கவுள்ளார். மற்ற தகுதியெல்லாம் அடுத்துதான் என்கிறார் ராஜன்.
பாபு என்பவர் கூறுகையில், இது உண்மையிலேயே நல்லதுதான். அம்மாவின் விருப்பமே எங்களது விருப்பமும். அவருடைய வெற்றிக்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் என்கிறார் ராஜன்.
விரைவில் விண்ணப்பம் தந்துள்ளோருடன் ஜெயலலிதா நேர்காணலில் ஈடுபடவுள்ளார். அதுவும் கூட நாள், நட்சத்திரம் பார்த்துதான் நடக்கும் என்கிறார்கள்.
இதில் எத்தனை பேர் ஜாதகத்தை 'சரி செய்து' தந்திருக்கிறார்களோ தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications