தஞ்சை-அடகு கடையில் 50 பவுன் நகைகள் கொள்ளை!

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை அருகே அடகு கடையில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி புதிய பஸ் நிலையம் அருகே திருச்சியைச் சேர்ந்த மீனாட்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடை ஒன்று உள்ளது.

இதில் வழக்கம் போல் தினசரி பணிகளை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை சாத்திவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் கடை திறக்க வந்த மோலாளர் ராமநாதன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு உடனடியாக போலீசார் உடனடியாக விரைந்தனர். அப்போது கடையில் லாக்கருக்குள் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நகைளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+