சென்னை: ஹை-டெக்காக மாறும் பேருந்து நிறுத்தங்கள்
சென்னை: சென்னை பேருந்து நிலையங்களில் பொதுத் தொலைபேசி, மின் விசிறி, மொபைல்போன் சார்ஜர்கள், ஜிபிஎஸ் கருவிகள், குடி தண்ணீர் சாதனங்கள் போன்றவற்றை நிறுவி, சென்னை பேருந்துக்களில் ஜிபிஎஸ் சிஸ்டத்தையும் பொறுத்தி போக்குவரத்தை ஹை-டெக்காக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த 6 மாதத்துக்குள் சென்னையில் உள்ள 500 பேருந்து நிலையங்களில் இந்த நவீன வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஜிபிஎஸ் பொறுத்தப்பட்டால் பேருந்து அந்த இடத்துக்கு எப்போது வரும் என்பதை பயணிகள் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
இதை தொடர்ந்து இந்த பேருந்துகளில் கேமரா, எப்எம, ஏடிஎம் சேவைகளும் கொண்டு வரப்படவுள்ளது.
இது குறித்து மெட்ரோ மீடியாவின் மேலான்மை இயக்குனர் முரளிதரன் கூறுகையில், இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற பயணிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம். பொது சொத்துக்களான இவற்றுக்கு சேதம் விளைவிக்காவி்ட்டால் இது போல் மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
