இலங்கை-மாசிமக விழாவை துறந்த கடலூர் கிராமங்கள்
கடலூர்: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரும் வகையில் மாசிமக விழா கொண்டாட்டத்தை கடலூர் அருகே உள்ள 20 கிராம மக்கள் புறக்கணித்தனர்.
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
குரு பகவான் சிம்ம ராசிக்கு சஞ்ரிக்கும் அன்றைய தினத்தில் பிறவி பாவங்களை களைய இந்துக்கள், கடலாடும் திருவிழாவை கொண்டாடுகின்றனர். கடலில் நீராட முடியாதவர்கள் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று சிவனை வணங்குவர்.
ஆண்டு தோறும் தமிழகத்தில் கடலூரில் இந்த விழா விமர்சிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கடலூருக்கு அருகில் உள்ள கிராம கோயில்களில் இருந்கும் உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு கடலாட கொண்டு வந்தனர்.
உற்சவ மூர்த்திகளுக்கு கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி தீர்தோற்சவம் செய்து, சாமி தரிசனம் கண்டனர். பெளர்ணமி அன்று கடலில் அலைகளின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று நீராட வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர்.
ஒருபக்கம் கடலூரில் மாசிமக விழா சிறப்பாக நடந்தாலும் மறுபக்கம் ஆலப்பாக்கம், பெத்தாங்குப்பம் குறவன்மேடு, முல்லைநகர், அம்பேதகர் கரைமேடு, கீழ்பூவாணிக்குப்பம், மேல்பூவாணிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராம மக்கள் இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு மாசிமகம் விழாவினை கொண்டாட போவதில்லை என முடிவு செய்தனர். இதையடுத்து அந்த கிராமத்தில் இருந்த கோவில் சிலைகள் பூஜைக்கு கடற்கரைக்கு எடுத்து வரப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications