தமிழகத்தில் மேலும் 2 நாள் மழை நீடிக்கும்

தமிழகத்தை கோடை வாட்டி வரும் நிலையி்ல் இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் வானம் மேகமூட்டமாகக் காணப்படுவதோடு பலத்த சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.
மேலும் பல பகுதிகளில் கன மழையும் பெய்கிறது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சட்டென குறைந்துவிட்டது.
தூத்துக்குடியில் மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றினால் நகர் முழுவதும் தூசி மண்டலமாக மாறியது. மணலும் தூசியும் பறந்தாதல் வாகன ஓட்டுகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். மேலும் மழையும் பெய்தது.
கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் பலத்த காற்றினால் கரைப் பகுதிக்கு தள்ளப்பட்டன. சில படகுகள் சூறாவளியில் சிக்கி கவிழ்ந்தன.
அதே போல நெல்லை மாவட்டத்திலும் பலத்த சூறைக் காற்று வீசியது. இதில் சேரன்மாதேவி, பத்தமடை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சரிந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதே போல நாகை மாவட்டத்திலும், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், பயறு சாகுபடி தொடர்ந்து மழையினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரு நாட்களுக்குப் பின் மீண்டும் கடும் வெயில் அடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications