நிலவுக்கு ரோபோ அனுப்பும் ஜப்பான்
டோக்கியோ: நிலவுக்கு 2020ல் ரோபோ ஒன்றையும் அடுத்த 10வது ஆண்டில் ஜப்பானியர் ஒருவரையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது ஜப்பான்.
உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு தங்கள் சொந்த முயற்சியில் மனிதர்களை அனுப்பியுள்ளது.
இதை தொடர்ந்து சீனா விண்வெளி நடைபயணத்துக்கும் ஏற்பாடு செய்து வருகிறது. இந்தியா சமீபத்தில் குறைந்த செலவில் நிலவுக்கு சந்திரயானை அனுப்பி உலக மக்களின் பார்வையை தன்பக்கம் திருப்பியது. தற்போது சந்திரயான் 2 திட்டத்துக்கு விரைவாக தயாராகி வருகிறது.
இப்படி சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் தொடர்ந்து விண்வெளியில் அதிக கவனம் செலுத்துவதால் தாங்கள் ஆசிய அளவில் பின்தங்க நேரிடுமோ என யோசித்த ஜப்பான் நிலவுக்கு ரோபோ மற்றும் மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இது குறி்த்து ஜப்பான் அரசு கூறுகையில், நிலவுக்கு 2020ல் ரோபோவும், 2030ல் மனிதனையும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். மனிதனை அனுப்புவது குறித்து ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி குழு ஒன்றும் விவாதித்தது. நிலவுக்கு ரோபோ மற்றும் மனிதனை அனுப்புவதன் மூலம் அங்குள்ளவற்றை மனித மேம்பாட்டுக்கு எப்படி பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றது.












Click it and Unblock the Notifications