அதிமுக உண்ணாவிரத உண்டியல்கள் சென்னை வந்தன
சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது வைக்கப்பட்ட உண்டியல்கள் சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திறகு வந்து சேர்ந்துள்ளன.
இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தத்தை வற்புறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதத்தின்போது உண்டியல் வைக்கப்பட்டது. அதில் ஜெயலலிதா ரூ. 5 லட்சம் போட்டு வசூலைத் தொடங்கி வைத்தார். அதேபோல மாநிலம் முழுவதும் உண்டியல்கள் வைத்து நிவாரணத் தொகை வசூலிக்கப்பட்டது.
ஜெயலலிதா தவிர மதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் தரப்பட்டது. இதுதவிர அதிமுக சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த உண்டியல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு நேற்று பாதுகாப்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. மாவட்ட செயலாளர்கள் உண்டியலை தலைமைக்கழக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் இன்று அல்லது நாளை சீல் உடைக்கப்பட்டு எண்ணப்படும் என்று தெரிகிறது.
உண்டியலில் உள்ள பணம் அனைத்தும் எண்ணப்பட்ட பின்பு முழு தொகையையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இந்த தொகையை ஜெயலலிதா செஞ்சிலுவை சங்கம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு விரைவில் அனுப்பிவைப்பார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications