கொளத்தூர் மணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதுரை சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
திண்டுக்கல்லில் நடந்த ஈழத் தமிழர் தொடர்பான கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி கடந்த 2ம் தேதி கொளத்தூர் மணி மேட்டூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் கோர்ட்டி்ல ஆஜர்படுத்தப்பட்ட அவரை பின்னர் மதுரை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்துள்ளது. இதனால் அவர் ஓராண்டுக்கு சிறையிலிருந்து விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இயக்குநர் சீமானும் இதேபோல தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications