3வது அணிக்கு பாமக நிச்சயம் வரும்: நல்லகண்ணு நம்பிக்கை
விழுப்புரம்: லோக்சபா தேர்தலில் பாமக நிச்சயம் 3வது அணியில்தான் இடம் பெறும். அந்த நம்பிக்கை உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பெண்ணாடத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியா பல மொழி, பல அரசியல் கட்சிகளை கொண்ட பெரிய நாடு. 2 அரசியல் அணிகள் என்ற கொள்கை இந்திய ஜனநாயக அமைப்புக்கு ஒத்து வராது.
காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா ஆகிய எந்த கட்சியாக இருந்தாலும், பல கட்சிகளை இணைத்து அல்லது அணி சேர்த்து தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாடு ஆகிவிட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இது உறுதியும் ஆகிவிட்டது. இந்த 2 கட்சிகளையும் நாட்டு மக்கள் பார்த்து விட்டனர். தற்போது 3-வது அணி உருவாகி வருகிறது.
இந்த அணி ஆட்சி அதிகாரம் என இல்லாமல் கொள்கை ரீதியாக நாட்டு நலன் கருதி அமையும். பா.ம.க.வும் இந்த அணிக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அவர்களும் நல்ல முடிவுக்கு வரவேண்டும்.
மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றது. காங்கிரஸ் கட்சி கொடுத்திருந்த எந்த உறுதி மொழியையும் செயல்படுத்தவில்லை.
பாரதீய ஜனதா மதவாத கட்சியாக இயங்குகிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 2 கட்சிகளும் விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படவில்லை. நாட்டு மக்களுக்காக பாடுபடும் ஓர் அணியாக 3-வது அணி அமையும்.
எங்கள் கட்சியை பற்றி கருணாநிதி சொல்வதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சி செய்ய தவறியவைகளையும், தவறுகளையும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இதை கருணாநிதி விரும்பவில்லை என்றார் நல்லகண்ணு.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications