தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை: தமிழத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் சற்று தெளிவாக காணப்படுகிறது.
இலங்கை அருகே தென் மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. நேற்று காலை முதல் இது இலங்கை மற்றும் வட தமிழ்நாடு கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி நிலை கொண்டுள்ளது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்யலாம். இன்றைய நிலவரப்படி இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெயில் ..
சென்னையில் கடந்த 2 நாட்களாக இருந்து வந்த மப்பும் மந்தராமுமான நிலை சற்று மாறி லேசான வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது வானம் இருட்டி வருகிறது. இருப்பினும் இதுவரை மழை எதுவும் இல்லை.
நாகையில் விடுமுறை
டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications