வேலை-மோசமான நகரங்கள் வரிசையி்ல் சென்னை
டெல்லி: உலகில் வேலை பார்ப்பதற்கு மோசமான சூழ்நிலைகளைக் கொண்ட நகரங்களின் வரிசையில் சென்னை, மும்பை, டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சர்வதேச ஆலோசனைக் கழகம் என்ற அமைப்பு இது தொடர்பான கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் மும்பை நகருக்கு மோசமான நகரங்களின் வரிசையில் 5வது இடமும், 6வது இடத்தில் டெல்லியும், 10வது இடத்தில் சென்னையும் வருகின்றன.
பணியாற்றுவதற்கு மோசமான நகரம் என்ற பெயரை நைஜீரியாவின் லாகோஸ் நகரம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை ஜகார்த்தா பெறுகிறது.
இந்த கருத்துக் கணிப்பில் வட அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களை சேர்த்துக் கொள்ளவில்லை. அதேபோல, போர் நடைபெறும் நகரங்கள், சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளையும் கருத்துக் கணிப்பில் சேர்த்துக் கொள்ளவில்லை.
மும்பை ஏன் மோசம்...?
மும்பையில் சுற்றுச்சூழல் சீர்கேடு மோசமாக உள்ளதாம். நோய்ப் பரவல் அதிகமாம். சுகாதார சீர்கேடும் அதிகமாம். அடிப்படைக் கட்டமைப்பு போதுமானதாக இல்லை. அரசியல் ரீதியிலான வன்முறைகள் அதிகம், சுற்றுச்சூழல் சரியில்லை என்று கருத்துக் கணிப்பில் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
டெல்லி...
டெல்லியில் வெப்ப நிலைதான் படு மோசம் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் அங்கு கடும் வெயில் நிலவுவதால் பணியாற்ற உக்ந்த நகரம் இல்லை என்று கூறியிருக்கின்றனர்.
அதேசமயம், டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ரொம்ப சூடு..
சென்னை நகரில் வெப்பம் அதிகம் என கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல, சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகம், நோய்ப் பரவல் மிரட்டல்அதிகம். பல பகுதிகள் ரொம்ப தூரத்தில் இருப்பதால் போய் விட்டு திரும்ப நெடு நேரம் ஆவதும் ஒரு பின்னடைவாக கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications