அதிமுக உண்டியல் பணம் வங்கி அதிகாரிகள் முன்பு திறப்பு
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் நடந்த அதிமுக உண்ணாவிரதத்தின்போது வசூலிக்கப்பட்ட உண்டியல் பணம் நேற்று வங்கி அதிகாரிகள் முன்பு திறந்து எண்ணப்பட்டது.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
உண்ணாவிரத மேடையில் உண்டியல்களும் வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் வைக்கப்பட்ட உண்டியலில் ஜெயலலிதா முதலில் ரூ. 5 லட்சம் பணத்தைப் போட்டு தொடங்கி வைத்தார்.
இவ்வாறு சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத மேடைகளில் வைக்கப்பட்ட உண்டியல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
மொத்தம் 45 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. இந்த உண்டியல்கள் நேற்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளின் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. பின்னர் அதில் இருந்த பணம் எண்ணும் பணி தொடங்கியது.
பணத்தை எண்ணி முடித்ததும் அவை அனைத்தும் வங்கியில் செலுத்தி டிடி எடுக்கப்படுமாம். இந்த டிடியை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக செலுத்தவுள்ளது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications