மக்களவை தொகுதி அறிமுகம்-16: நாமக்கல்

மாவட்டத் தலைநகரமான நாமக்கல்லின் பெயரில் அமைந்துள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
ராசிபுரம் தொகுதியில் முன்பு இருந்த சட்டசபைத் தொகுதிகள்
சின்னசேலம், ஆத்தூர், தலவாசல் (தனி), ராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் (தனி).
தற்போது நாமக்கல் தொகுதியில் இணைந்துள்ள புதிய சட்டசபைத் தொகுதிகள் - சங்கரி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு.
பழைய ராசிபுரம் தொகுதி, காங்கிரஸின் கோட்டையாக விளங்கியதாகும். ராசிபுரத்தில் ஆறுமுறை காங்கிரஸ் வென்றுள்ளது. அதற்கு அடுத்து அதிமுக இரண்டு முறையும், தமாகா ஒரு முறையும் வென்றுள்ளன.
தேவராஜன் காங்கிரஸ் சார்பி்ல் இத்தொகுதியில் ஐந்து முறை வென்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது ராசிபுரம் தொகுதியின் எம்.பியாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ராணி.
சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தவரை, சங்கரி, ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளை திமுகவும், நாமக்கல்லை காங்கரிஸும், திருச்செங்கோட்டை அதிமுகவும் வைத்துள்ளன.
நாமக்கல் தொகுதியின் முதல் எம்.பி. யார் என்பதை வரும் தேர்தல் முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications