சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம்
சேலம்: சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் திடீரென அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் எஸ்.கே. செல்வம். அவரை இந்த பொறுப்பிலிருந்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென நீக்கியுள்ளார்.
மேலும், இந்த பொறுப்பையும் சேர்த்து சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மஞ்சினி ஏ.கே. முருகேசன் கவனித்து கொள்வார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.கே. செல்வம் அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் முடியும் வரை சேலம்புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் மஞ்சினி ஏ.கே. முருகேசன், சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்றார்.
அதிமுகவில் பொறுப்பாளர் மாற்றம் அடிக்கடி நிகழ்ந்து வருவதால் ஒரு தரப்பினர் மகிழ்ச்சியும், மற்றொரு தரப்பினர் வேதனையும் அடைந்து வருவவதாக அக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications