வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விற்க தமிழகம் தடை
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசு தடை விதிக்கவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் சி.பி.சிங் கூறுகையில்,
நமது மின் தேவையில் 49 சதவீதத்தை வாரியத்தின் மின் உற்பத்தி மூலமும், 51 சதவீதத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதன் மூலமும் ஈடுகட்டி வருகிறோம். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுதோறும் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால், 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. 2008-09ம் ஆண்டில் 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின் தட்டுப்பாட்டைப் போக்க, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலையில் உள்ளதால், அடுத்த ஆண்டில் இந்த இழப்பு மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும். மின்வாரியம் இழப்பைச் சந்தித்தாலும் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை மாதந்தோறும் 120 கோடி ரூபாய், மின்சாரம் வாங்குவதற்காக கூடுதலாக வாரியம் செலவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இது 225 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த மாதம் இது 250 கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அடுத்த மூன்றாண்டில் 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழகத்தில் மின் உற்பத்தியில் ஈடுபடும் தனியார் உற்பத்தியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்வாரியம் மற்றும் தமிழக நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications