பிரார்த்தனையில் மாணவிக்கு முத்தம்-பாஸ்டர் கைது
பணகுடி: பிரார்த்தனை செய்ய சர்ச்சுக்கு வந்த பிளஸ்டூ மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் எஸ்.நியூட்டன். இவர் அப்பகுதியில் விக்டரி அசெம்பளி ஆப் காட் என்ற சபையை நடத்தி வருகிறார்.
இங்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜெபக்கூட்டங்கள் நடைபெறும். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்களும் கலந்து கொள்வர்.
அடங்கார் குளத்தை சேர்ந்த கிருஸ்டி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சபை பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சபைக்கு வரும் கிறிஸ்டியிடம் பாஸ்டர் நியூட்டன் இரட்டை அர்த்தங்களுடன் பேசியுள்ளார். மேலும் இரவு நேரங்களில் செல்போனில் மிக ஆபாசமாக பேசியும், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியும் தொந்தரவு செய்துள்ளார்.
இதுபோல் கிறிஸ்டியுடன் வரும் அதே ஊரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவரையும் சபை அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த கிறிஸ்டி பணகுடி போலீசில் புகார் செய்தார். இதில் பாஸ்டர் நியூட்டன் எங்களிடம் தவறாக நடக்க முயன்றதுடன் சபைக்கு நாங்கள் செல்லாததால் அங்கு வருபர்களிடம் எங்களை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் செய்யது நிஷார் அகமது வழக்கு பதிவு செய்து பாஸ்டர் நியூட்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications