ஜப்பானே கண் திற..லண்டனில் தமிழர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இலங்கையில் நடந்து வரும் இன அழிப்பிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற ஜப்பான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இங்கிலாந்தில் உள்ள ஜப்பான் தூதரகம் முன்பு பெரும் திரளான தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது.

குழந்தைகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி தமது வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உணர்வுகளையும், உரிமைகளையும் காட்டி போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதைப் பார்த்து ஜப்பான் தூதரக ஊழியர்களே கலங்கி விட்டனர். மேலும் அப்பகுதி வழியாக சென்ற மக்களின் நெஞ்சை உருக்கும் வகையில் போராட்டம் இருந்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், ஜப்பான் இலங்கையில் நடக்கும் போரை நிறுத்து,
நிறுத்து நிறுத்து நிதி உதவியை நிறுத்து
உதவு உதவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு
ஜப்பான் அரசே! கண்ணை திறந்து பலியாகும் தமிழனை பார்
UN தடை செய்த கொத்துக்குண்டு தமிழனை கொள்வது தெரியவில்லையா?"
வேண்டும் வேண்டும் தீர்வு வேண்டும் போன்ற பதாகைகளை தாங்கியவாறும் முழக்கங்களை எழுப்பியவாறும் மக்கள் நின்றனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தினை இங்கிலாந்து தமிழர் பேரவை, இங்கிலாந்து தமிழர் மகளிர் அமைப்பு மற்றும் தமிழ் இளைஞர்கள் அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்தன.

போராட்டத்தின் முடிவில் ஐப்பானிய தூதரகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+