ஓசூர் செக்போஸ்ட்டில் கத்தையாக சிக்கிய மாமூல்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் கத்தை கத்தையாக லஞ்சப் பணம் சிக்கியது.

ஓசூர் ஜுஜுவாடி அருகே பெண்ணாகரத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்லும் சாலையில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது.

இங்கு நேற்று முன்தினம் அதிகாலையில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ராமசந்திரன் தலைமையில் தாசில்தார் இலியாஸ் பாஷா, வருவாய் அதிகாரி சிவசந்திரன், இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் திடீர் ரெய்டில் இறங்கினர்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 92 ஆயிரத்து 260 ரூபாய் சிக்கியது. இதற்கு எந்தக் கணக்கும் இல்லை.

இதேபோல் பிற மாநிலங்களில் இருந்து ஓசூர் வழியாக வாகனங்கள் வரும் சாலையில் அமைந்துள்ள சோதனை சாவடியிலும் திடீர் சோதனை நடத்தப் பட்டது..

அங்கு கணக்கில் காட்டாமல் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 76 ஆயிரத்து 970 சிக்கியது.

அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை இந்த சோதனைகள் நடந்தன. மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 680 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிகளில் இருந்த போலீஸார் ரங்கநாதன், கேசவன், பழனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+