கோவை: மணல் கடத்தல்-தடுத்தவருக்கு வெட்டு
கோவை: கோவை அருகே நொய்யலாற்றில் மணல் கடத்தலை தடுக்க முயன்றவர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டப்பட்ட சம்பவம் அஙகு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் அருகில் உள்ளது சந்தேகவுண்டன்பாளையம். இங்கு சுமார் 84 தலித் மக்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் அருகே நொய்யலாற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி சாமிநாதன் என்பவரும் அவரது மகனும் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். கிராம நிர்வாக அதிகாரி உத்தரவின் பேரில் பகவதி மற்றும் குமார் ஆகிய இருவரும் சென்று மணல் அள்ளக் கூடாது என அவர்களை தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சாமிநாதனும் அவரது மகனும், பகவதி மற்றும் குமார் மீது தாக்குல் நடத்தினர். மேலும் அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பகவதி (48), குமார் (24) ஆகியோருக்கு முதுகு, கைவிரல், கால் பகுதி என பல இடங்களில் வெட்டு விழுந்து படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சிகிச்சைக்கு அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணைக்கு பயந்து சாமிநாதனும், அவரது மகனும் தலைமறைவாக உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications