சென்செக்ஸ்: நேற்று ஜோர்; இன்று டல்!
மும்பை: வாரத்தின் முதல் நாளான நேற்று சாதகமாக நடந்த பங்கு வர்த்தகம், இன்னு மீண்டு எதிர்மறைப் போக்குக்கு மாறியுள்ளது.
நேற்று வர்த்தக நேரமுடிவில் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து மொத்தக் குறியீட்டெண் கிட்டத்தட்ட 900-ஐ நெருங்கியது. ஆனால் இன்று ஆரம்பவே பெரும் மந்த கதியில் இருந்தது. குறிப்பாக டெக்னாலஜி துறை சார்ந்த பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
எடுத்த எடுப்பில் சென்செக்ஸில் 27 புள்ளிகள் வரை சரிந்திருந்தது. ஆனால் நிப்டியில் 5 புள்ளிகள் அதிகரித்தே காணப்பட்டது. எனவே பங்குகள் வர்த்தகம் சரிவிலிருந்து மீள வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் எதிர் பார்ப்புகளைப் பொய்யாக்கும் விதத்தில் 81 புள்ளிகள் வீழ்ச்சியிலேயே முடிந்தது சென்செக்ஸ்.
அமெரிக்க பங்குச் சந்தைகளில் நேற்று கடும் வீழ்ச்சி நிலவியது. கிரெடிட் கார்டு பாக்கி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை பெறுமளவு அதிகரித்துவிட்டதாகவும், இது வங்கியின் வருவாயை அடியோடு முடக்கிவிட்டதாகவும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி வெளிப்படையாக அறிவித்துவிட்டதால், பல வங்கிகளின் பங்குகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. டோவ் ஜோன்ஸ், நாஸ்டாக் இரண்டிலுமே குறியீட்டெண்கள் சரிந்தன.
சென்செக்ஸ் தவிர்த்த ஆசியாவின் பிற பங்குச் சந்தைகளான நிக்கி, டாபிக்ஸ், ஹாங்க்ஸெங் மற்றும் சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் சந்தைகளில் இன்று சாதகமான போக்கே நிலவுகிறது.
சிவப்பில் முடிந்த சென்செக்ஸ்!
இன்றைய வர்த்தக நேர முடிவில் 81 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸில். தேசிய பங்குச் சந்தை நிப்டில் 20 புள்ளிகளஅ குறைந்தது.
டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, மாருதி சுசுகி, ஐடிசி போன்ற பங்குகள் ஓரளவு லாபம் சம்பாதித்தன. டிசிஎஸ், ரான்பாக்ஸி, ரிலையன்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் நஷ்டம் கண்டன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications