பெங்களூர் தமிழ் ஜோதிடர் மனைவியுடன் கைது
பெங்களூர்: அமெரிக்கா சென்று ஜோதிடம் பார்க்கும் ஆசையில் போலி ஆவணங்கள் கொடுத்து விசா வாங்க முயற்சித்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் ஜோதிடர் மற்றும் அவரது மனைவியை சென்னை ராயபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெங்களூர் எலகண்டாவை சேர்ந்தவர் நாகேந்திரன்(36). ஜோதிடராக பணியாற்றி வந்த இவர் அமெரிக்கா சென்று ஜோதிட தொழிலில் ஈடுபட நினைத்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் தனக்கும், தனது மனைவி சுகுணா (26) என்பவருக்கும் சுற்றுலா விசா வழங்க வேண்டுமா என கோரி விண்ணப்பம் செய்தார்.
இந்நிலையில் அவர்கள் நேற்று துணை தூதரகத்துக்கு நேரடி விசாரணைக்கு வந்தனர். அப்போது அவர் கொடுத்த பான் கார்டு மற்றும் வருமான வரி சான்றிதழ்கள் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தூதரக அதிகாரிகள் சென்னை ராயபேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் சைலேத்திராஜ் ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் நாகேந்திரா கூறுகையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்தால் உடனடியாக விசா பெற்றுவிடலாம் என புரோக்கர் ஒருவர் கூறியதை அடுத்து இவ்வாறு செய்தேன். அடுத்தவர் பேச்சை நம்பி மோசம் போய்விட்டேன் என்றார் நாகேந்திரா.
இதேபோல தகவல் தொழில்நுட்ப என்ஜினியராக வேலை பார்ப்பதாக போலி ஆவணம் கொடுத்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது கலீல் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று மட்டும் அமெரிக்க துணை தூதரகத்தில் போலி ஆவணம் கொடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications