பாமக அணியில் இடம் பெறக் கூடாது-தேமுதிக தொண்டர்கள் போர்க்கொடி

கூட்டணியா, தனித்துப் போட்டியா என்ற பெரும் சங்கடத்தில் உள்ளார் விஜயகாந்த். திமுக கூட்டணிக்கு வாருங்கள் என காங்கிரஸ் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூறி வருகிறது. அதேபோல அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்த்தைக் கொண்டு வரவும் அங்கிருந்து பீலர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
எக்காரணம் கொண்டும் கூட்டணியே கிடையாது, கடவுளுடன் மட்டும்தான் கூட்டணி, தனித்துதான் போட்டியிடுவேன், தைரியம் இருந்தால் அனைத்துக் கட்சிகளும் தனித்து நிற்கட்டும் பார்க்கலாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார் விஜயகாந்த்.
இந்த நிலையில் கூட்டணிக்குள் அவரை இழுக்க நடந்து வரும் முயற்சிகளால் ஏதாவது ஒரு கூட்டணிக்குள் அவர் சிக்கிக் கொள்ளக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பெரும் திரளான தொண்டர்கள் திரண்டனர்.
விஜயகாந்த் முன்னிலையில் அவர்கள் பாமக இருக்கும் கூட்டணியில் நாம் இணையக் கூடாது என்று கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன் மூலம் ஒரு வேளை பாமக திமுகவுக்குப் போனால் தேமுதிக அதிமுகவுக்குப் போகக் கூடும். பாமக அதிமுகவுக்குப் போனால் தேமுதிக திமுகவுக்குப் போகக் கூடும் அல்லது தனித்துப் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications