பாஜக வெற்றியை மாயாவதி தடுப்பார்; திமுக கூட்டணி வெல்லும்-ஜோதிடர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், தேசிய அளவில் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார் என்றும் பிரபல ஜோதிடர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

பிரபல ஜோதிடர் டாக்டர் எஸ்.வி.நகந்த், ஜோதிடர் டாக்டர் எஸ்.எம்.சிலகுரி, ஜோதிடர் டாக்டர் எஸ்.சதுர்வேதி, ஜோதிடர் பி.மதன்லால், ஜோதிடர் வி.ராதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள கணிப்பில்,

தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காது. பாஜகவை விட காங்கிரசுக்கு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். ஆனால் இது அதிக நாள் நீடிக்காது. விரைவிலேயே ஆட்சி கவிழும்.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு தற்போதைய கிரக நிலைகள் சாதகமாக இல்லை. பாஜகவுக்கு கர்நாடகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் அத்வானி ஜாதகத்தின்படி அவருக்கு ராசியான திசை எதுவும் இல்லை. இதனால் அவர் பிரதமர் பதவியில் அமர முடியுமா என்பது சந்தேகமே. அதே நேரத்தில் சோனியா காந்திக்கு கிரக அமைப்புகள் சாதகமாக உள்ளன.

பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி தான் மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார். காங்கிரசுக்கு ஆந்திராவில் தான் கணிசமான வெற்றி கிடைக்கும்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கே அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும். பிகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+