திமுகவுக்கு நாடார் பேரவை ஆதரவு
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக நாடார் பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக அரசுக்கு இன்னும் இரண்டரை ஆண்டு காலம் பதவிக்காலம் உள்ளது. எனவே திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்தால்தான் நாடார் சமுதாயத்தினரின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
அதன் அடிப்படையில் வரும்லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம்.
திமுக அரசும் சரி, அதிமுக அரசும் சரி இதுவரை இருந்த காலத்தில் நாடார் சமுதாயத்தினருக்கு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. இருப்பினும் தற்போதைய திமுக அரசு நாடார் சமுதாயத்தினரின் வேதனைகளையும், கோரிக்கைகளையும் புரிந்துள்ளது. அந்த அடிப்படையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம்.
லோக்சபா தேர்தலை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம் என்றார்.
உடன் இருந்த பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கூறுகையில், நாடார் பேரவையி்ல 10 லட்சம் பதிவு பெற்ற உறுப்பினர்கள் உள்ளனர். 234 சட்டசபைத் தொகுதிகளிலும் 1 கோடி நாடார் சமுதாயத்தினர் பரவலாக உள்ளனர் என்றார்.
திமுக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு:
திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராக நாகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பாளராக மு.நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக எஸ்.பி.சற்குணபாண்டியன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இடம் பெறுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications