கிரேனிலிருந்து இரும்பு ராடுகள் விழுந்து ஒருவர் பலி
சென்னை: சென்னையில் பறக்கும் சாலை கட்டுமான பணியில் போக்குவரத்துப் போலீசார், அதிகாரிகள், கிரேன் ஊழியர்களின் அலட்சியத்தால் இரும்புக் கம்பிகள் விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் உடல் நசுங்கி பலியானார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரவாயலிலிருந்து மாதவரம் வரையிலான மேம்பால பறக்கும் சாலை பணிகள் நடைப் பெற்று வருகிறது. அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே நேற்று இரவு ராட்சத கிரேன் மூலம் இரும்புக் கம்பிகளை பாலத்தின் மேல் ஏற்றும் பணி நடைபெற்றது.
அப்போது கீழே போக்குவரத்தை போலீசாரோ, அதிகாரிகளோ, கிரேன் ஊழியர்களோ நிறுத்தவில்லை. இதனால இரும்புக் கம்பிகள் கிரேனில் மேலே போய்க் கொண்டிருந்தபோது கீழே வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
சுமார் 4 டன் எடையுள்ள இரும்பு ராடுகள், இரும்பு ரோப் கயிறு மூலம் கட்டப்பட்டு பாலத்தின் மீது ஏற்றப்பட்டபோது ரோப் அறுந்து இரும்புக்க ம்பிகள் கீழே விழுந்தன.
இதில் கீழே சென்று கொண்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் மீது இரும்பு ராடுகள் விழுந்தன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் மற்ற வாகனங்களில் சென்ற 7 பேர் படுகாயமடைந்தனர்.
பலியானவர் அம்பத்தூர் நகரசபை முன்னாள் திமுக கவுன்சிலரான சீனிவாசன் (73) என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் நடந்தவுடன் கிரேன்களைக் கொண்டு இரும்புக் கம்பிகளை அகற்றி அதில் சிக்கியவர்களை காப்பாற்றாமல், கிரேன் ஆபரேட்டர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.
இதனால் இரும்பு ராடுகளை தீயணைப்புப் படையினர் வந்த பின்னரே அகற்ற முடிந்தது. அதற்குள் அதில் சிக்கியிருந்த சீனிவாசன் பலியாகிவிட்டார்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications