மாவட்ட செயலாளரே இல்லாத கரூர் மதிமுக!
கரூர்: கரூர் மாவட்டம் மதிமுக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் இன்றி நடந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் வேதனையுடன் கூறியதாவது:
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது உயிர் நீத்த கரூர் நொச்சிப்பட்டி தண்டபாணியின் உடல் தகனம் செய்யப்பட்ட போது தான் மதிமுக என்ற கட்சி உருவானது.
இதனையடுத்து திமுகவில் இருந்த கரூரைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் வைகேவின் மேல் கொண்ட நேசம் காரணமாக மதிமுகவில் இணைந்தனர். இதனால் கரூர் மதிமுகவின் எக்கு கோட்டையாக விளங்கியது.
வைகோவின் நெருங்கிய நண்பரான மொஞ்சனூர் இராமசாமியை மாவட்ட செயலாளராக வைகோ நியமித்தார். அவர் பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றினார்.
அவர் உடல் நலக்குறைவு காரணமாக அப்பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய வைகோ 13 பேர் கொண்ட பொறுப்புக் குழு அமைத்தார். அந்த குழு கடந்த ஒன்னறை வருடங்களாக செயல்பட்டு வருகின்றது.
கட்சிக்கு மாவட்டச் செயலாளர் இல்லாததால் ஆர்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம், போன்றவற்றிலும், பல முக்கிய விவகாரத்திலும், முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். இதை நாங்கள் வைகோவிடமும் சொல்ல முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார் அவர்.
தமிழகத்தில் தனிப் பெரும் கட்சியாக விளங்கும் மதிமுகவில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் இன்றியே இயங்கி வருகின்றது. மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வைகோ முன்வர வேண்டும் என்பதே மதிமுகவினரின் எதிர்பார்ப்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications