போலி நில ஆவணம் மூலம் ரூ. 2 கோடி மோசடி
நெல்லை: நெல்லையில் போலி ஆவணம் தயார் செய்து, அதன்மூலம் ரூ. 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து ஏமாற்றிய கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். வங்கி மேலாளர் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஜான் பி ஜோசப். இவர் கேரளா மாநிலத்தில் கொச்சி, காக்கநாடு, குசுமகிரி அஞ்சல் ஆகிய பகுதிகளில் பிளான்டேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது சகோதரர் ஜார்ஜ் பி ஜோசப்பிற்கும், ராதாபுரம் அருகேயுள்ள உறுமன்குளத்தில் 308 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை வள்ளியூர் அம்பேத்கார் நகரை சேர்ந்த டேனியல், மார்த்தாண்டத்தை சேர்ந்த சுஜீன், கேரளா மாநிலம் நாராக்கல்லை சேர்ந்த வின்சென்ட், தச்சநல்லூரை சேர்ந்த முகமது செரிப், ராமையன்பட்டியை சேர்ந்த அன்னசாகிப் மனைவி ரசிதா பேகம், சுலைமான் மனைவி ரசிதா பேகம், இப்ராகிம் மனைவி சுபுராபேகம், கரிம்கான் மனைவி ஷபியா, இலந்தகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் பாத்தி்மாபேகம், பாபுமிஸ்ரிக்கான், மார்த்தாண்டத்தை சேர்ந்த கிறிஸ்துதாஸ், எர்ணாகுளத்தை சேர்ந்த ராஜன், எர்ணாகுளம் நார்த் பெச் வடக்கு பகுதியை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 13 பேரும் போலியான ஆவணங்களை தயார் செய்து ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதே இடத்திற்கு மற்றொரு போலியான ஆவணங்களை தயார் செய்து ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து ஒரு கோடி ருபாய் கடன் பெற்றனர். இதனையறிந்த நிலத்தி்ன் உரிமையாளர் எஸ்.பி ஆஸ்ரா கர்க்கிடம் புகார் செய்தார். இவர்களின் புகாரின் பேரில் மேற்கண்டவர்களில் 8 பேரை கைது செய்தனர். வங்கி மேலாளர் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications