தீக்குளித்த ராஜசேகர் குடும்பத்துக்கு ரூ3 லட்சம்-நெடுமாறன்
அரியலூர்: இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த ஜெயங்கொண்டம் வாலிபர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கீழவெளிகாட்டு நாகப்பேரி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (30) கூலி தொழிலாளி. பாமக தொண்டர். இவருக்கு செல்வி (30) என்ற மனைவியும், அஜித்(10) என்ற மகனும் உள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டு மன வேதனையடைந்த ராஜசேகர் கடந்த 15ம் தேதி அன்று தீக்குளித்தார். தஞ்சை மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த ஜெயங்கொண்டம் வாலிபர் ராஜேசகர் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த ஜெயங்கொண்டம் வாலிபர் ராஜேசகர் குடும்பத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ரூ 3 லட்சம் வழங்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications