ராஜஸ்தானின் டோங் தொகுதியில் போட்டியிட அஸார் விருப்பம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்க் தொகுதியில் போட்டியிட அஸாருதீன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது முதலே அஸாருதீன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் அவர் போட்டியிடலாம் என முதலில் கருதப்பட்டது. பின்னர் மும்பையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. பின்னர் உ.பியில் போட்டியிடலாம் என பேச்சு அடிபட்டது.
ஆனால் அஸாருதீன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரம்பரியான டோங்க் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளாராம்.
ராஜஸ்தான் சாம்ராஜ்யத்தில் இடம் பெற்றிருந்த ஒரே முஸ்லீம் சமஸ்தானம் டோங்க் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
டோங்க் தொகுதியில் போட்டியிடுவது குறித்து அஸாருதீன் கூறுகையில், டோங்க் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளேன். அங்கு பலமுறை நான் போயுள்ளேன். எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னை அங்கு போட்டியிட அவர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும் அதுகுறித்த முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என்றார்.
கடந்த வாரம் அஸாருதீன் ஆஜ்மீர் தர்காவுக்குப் போயிருந்தார். இதனால் அவர் ராஜஸ்தான் மாநில தொகுதிக்கு குறி வைப்பதாக கருதப்பட்டது. தற்போது தனது ஆசையை வெளிப்படையாக அறிவித்துள்ளார் அஸார்.
டோங்க் தொகுதியில் 2 லட்சம் முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். ராஜஸ்தான் தொகுதிகளிலேயே அதிக அளவில் சிறுபான்மையினர் உள்ள ஒரே தொகுதியும் இதுவே.
ஆனால் முஸ்லீம்களை மட்டும் தான் முக்கியமாக கருதவில்லை என்று கூறும் அஸார், முஸ்லீம்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினருக்கும் தான் சேவை செய்ய விரும்புவதாகவே கூறியுள்ளார் அஸார்.
ஆனால் டோங்க் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் ஜாம்பவான் நமோநாராயணன் மீனா முயன்று வருகிறார். இதனால் அஸாருக்கு சீட் கொடுப்பதா அல்லது நமோ நாராயணனுக்கு தருவதா என்ற குழப்பத்தில் காங்கிரஸ் உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications