சிறு கட்சிகளுக்கு அதிமுகவில் சீட் இல்லை? - வெற்றிக்குப் பாடுபட ஜெ. வேண்டுகோள்
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறு கட்சிகளின் தலைவர்களை ஜெயலலிதா சந்தித்து அதிமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார். இந்தக் கட்சிகளுக்கு சீட் கொடுக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகி விட்டதாக தெரிகிறது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய பெரிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன.
பாமக கூட்டணிக்கு வருவது போலத் தெரிகிறது. இப்போதைக்கு இல்லை என்றாலும் கூட பாமக அதிமுக கூட்டணிக்கு வருவது உறுதியாகி விட்டால் கூடவே விடுதலைச் சிறுத்தைகளும் வந்து விடும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஆளுக்கு எத்தனை சீட் என்பதை கிட்டத்தட்ட ஜெயலலிதா முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறு கட்சிகளுக்கு அவர் சீட் எதுவும் தரப் போவதில்லை என்று தெரிகிறது. காரணம், அவர்களுக்குக் கொடுக்க சீட் இருக்காது என்பதால்.
நேற்று தங்கள் கூட்டணி கட்சியில் உள்ள சிறு கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. இந்த கூட்டத்தில், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் என்.சேதுராமன், மதசார்பற்ற ஜனதாதள கட்சி மாநில தலைவர் முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்களிடம் சீட் கொடுக்க இயலாத சூழ்நிலையை ஜெயலலிதா விளக்கியதாக தெரிகிறது. மேலும், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுங்கள் என்றும் வலியுறுத்தினார் ஜெயலலிதா.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications