மேல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு - மாயாவதி வீசும் வலை!

பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளார் மாயாவதி.
தனது பிரசாரத்தின்போது காங்கிரஸ், பாஜகவை கடுமையாக சாடினார். மேல் ஜாதியினரின் வாக்குகளைக் கவரும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.
மாயாவதி பேசுகையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருக்கும் முற்பட்ட வகுப்பினருக்கு எனது கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும்.
உ.பியில் இதை நான் வெற்றிகரமாக செய்துள்ளேன். இதை தேசிய அளவிலும் விஸ்தரிப்பேன்.
காங்கிரஸும், பாஜகவும் இத்தனை ஆண்டு கால ஆட்சியில், ஏழை மக்களின் நலன்களை புறக்கணித்து விட்டன. அவர்களின் உயர்வுக்காக எதையும் செய்யவில்லை இந்த கட்சிகள்.
மேலும், இட ஒதுக்கீட்டு கொள்கையிலும் இதுவரை இருந்த அரசுகள் நிலையான கொள்கையைக் கையாளாமல் அதை நீர்த்துப் போகச் செய்து விட்டன.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளையும் காங்கிரஸ், பாஜக அரசுகள் தீர்க்க தவறி விட்டன.
பெரும் பெரும் முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே இவர்கள் ஆட்சி புரிகின்றனர்.
சாதாரண வகுப்பு மக்கள் தரும் நிதியைக் கொண்டுதான் நான் கட்சியை நடத்துகிறேன், தேர்தல் செலவுகளையும் பார்த்துக் கொள்கிறேன். எனவே எனது அரசுக்குத்தான் ஏழைகளின் பிரச்சினைகள் தெரியும். அவர்களின் தேவைகளும் எங்களுக்குத்தான் புரியும்.
நாங்கள் சொன்னதை மட்டுமே செய்வோம். உ.பி. அரசின் நிர்வாகத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றார் மாயாவதி.
தனது பேச்சின்போது இடதுசாரிகள் குறித்து அவர் எந்த விமர்சனமும் செய்யவில்லை.
52 நாள் தேர்தல் பிரசாரத்தை மாயாவதி திருவனந்தபுரத்திலிருந்து தொடங்கியுள்ளார். அனைத்து மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications