மக்களுடன் மட்டுமே கூட்டணி - அடையாளம் காட்டுபவர்களுக்கு வாக்களியுங்கள்: விஜயகாந்த்

திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளன. காரணம் தேமுதிகவும், பாமகவும் தங்களது நிலையை முடிவு செய்யாததே.
இரு கட்சிகளையும் இழுக்க திமுக, அதிமுக ஆகியவை பல வழிகளில் படு தீவிரமாக உள்ளன. ஆனால் கழுவிய நீரில் நழுவிய மீன் போல இரு கட்சிகளும் தங்களது பேரத்தில் பிடிவாதமாக இருப்பதால் இரு கட்சிகளையும் சேர்த்துக் கொள்வதில் திமுக, அதிமுக தரப்பில் குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் நிலையை இன்று காஞ்சிபுரத்தில் அறிவித்தார்.
இன்று பிற்பகல் அவர் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பெருமளவில் திரண்டிருந்த தேமுதிக தொண்டர்களுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசினார்.
பலத்த வரவேற்புக்கு மத்தியில் விஜயகாந்த் பேச்சை தொண்டர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். தொண்டர்கள் கடலுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசுகையில்,
பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், நான் வருகிற 26ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன்.
தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யப் போகிறேன். நான் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளேன். யாருடனும் கூட்டணி சேர மாட்டேன்.
நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள்.
ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை கொடுக்க ஏற்பாடு செய்வேன் என்றார் விஜயகாந்த்.
தனித்துப் போட்டி என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்து விட்டதால் அரசியல் களத்தில் நிலவி வந்த பெரும் குழப்பத்திற்கு பெரும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த்தின் அறிவிப்பை கூடியிருந்த தொண்டர்கள் பெருத்த ஆரவாரத்தோடு கைககளைத் தட்டி வரவேற்றனர்.
மத்திய அரசின் மூலமே தீர்வு...
முன்னதாக நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக முதல் முறையாக மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் பல முக்கிய பிரச்னைகள் மத்திய அரசின் மூலமே தீர்க்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, காவிரி நதிநீர் பங்கீடு, பாலாற்று அணை, முல்லைப் பெரியாறு நீர் தேக்கம், ராமேஸ்வரம் மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்னை போன்றவை மத்திய அரசின் மூலமே தீர்க்கப்பட வேண்டும்.
இதுவரையில் இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகத்துக்கென உள்ள தனிப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையிலும், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஊழல் போன்றவற்றைப் போக்கும் வகையிலும் மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் தேமுதிக முக்கிய கடமையாற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.
மத்திய அரசின் மூலமாக மட்டுமே என்ற வார்த்தையை தேமுதிக அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்ததால் கூட்டணிக்கு விஜயகாந்த் தயாராகி விட்டதாக கருதப்பட்டது.
ஆனால் மக்களுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் இன்று கூறியுள்ளார். இருப்பினும் நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியுள்ளது சூசகமாக எதையோ உணர்த்துவது போல உள்ளதாக கருதப்படுகிறது.
காங்கிரஸுக்கு மறைமுக ஆதரவு?
இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் மறைமுகமாக விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
விஜயகாந்தின் வலதுகரத்திற்கே சீட் இல்லையா.. தேமுதிகவில் புதிய பஞ்சாயத்து -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ












Click it and Unblock the Notifications