நானோ வருகை எதிரொலி - பங்குச் சந்தையில் காளை துள்ளல்
மும்பை: நானோவின் வருகை மற்றும் அமெரிக்க பொருளாதார மீட்சி நிலை குறித்த எதிர்பார்ப்புகள் இந்திய பங்குச் சந்தையில் ஒரு புதிய துள்ளலை ஏற்படுத்தியுள்ளது வாரத்தின் துவக்க நாளான இன்று. சென்செக்ஸில் 450 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 130 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு காணப்பட்டது.
உலகின் மலிவு விலைக் காரான டாடா மோட்டார்ஸின் நானோ இன்று அறிமுகமாகியுள்ளது. இந்தக் காருக்கு விரைவில் முன்பதிவு துவங்குகிறது.
கடும் நஷ்டம் மற்றும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஒரு மிகப் பெரிய நம்பிக்கையாக அமைந்துள்ளவை இப்போது இந்த சிறு ரகக் கார்கள்தான். இந்தக் கார்களின் முன்பதிவு மூலம் மட்டுமே ரூ.7000 கோடி வரை 15 தினங்களில் திரட்டிவிட முடியும் என நம்புகிறது டாடா மோட்டார்ஸ்.
நானோ வருகையால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகமும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இன்று வர்த்தகம் துவங்கியபோதே 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்டது சென்செக்ஸ்.
டாடா மோட்டார்ஸின் பங்குகள் அதிகபட்சம் 8 சதவிகிதம் வரை அதிக விலைக்குக் கைமாறின.
இன்னொரு பக்கம் அமெரிக்காவின் நிதிச் சலுகைகள் காரணமாக நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாலும் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இன்றைய வர்த்தகத்தில் பெரும் லாபம் சம்பாதித்த நிறுவனப் பங்குகள், ரான்பாக்ஸி லேபராட்டரிஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி, ரிலையன்ஸ் இன்ப்ரா பங்குகள் அதிக லாபத்தில் கைமாறின.
டிஎல்ப் பங்குகள் நஷ்டத்தில் விற்பனையாகின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 457 புள்ளிகள் அதிகரித்து 9424 ஆகவும், நிப்டியில் 132 புள்ளிகள் உயர்ந்து 2939 ஆகவும் நிலைபெற்றன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications