இனப்படுகொலை-பட்டம் வாங்க மறுத்த மாணவி!
அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இலங்கை தமிழர் படுகொலையை காரணம் காட்டி மாணவி ஒருவர் பட்டம் பெற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூரில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் படித்து முடித்த மாணவ - மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி முதல்வர் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்து இருந்த போது, ஒவ்வொரு மாணவராக பெயர் சொல்லி அழைக்கப்பட அவர்கள் மேடைக்கு சென்று பட்டத்தைப் பெற்றனர்.
இந்த கல்லூரியில் எம்.எஸ்.சி. சுற்றுசூழல் படிப்பு முடித்த அரியலூர் ஒட்ட கோவிலை சேர்ந்த மாணவி சுமதியை பட்டம் பெற அழைத்தனர்.
ஆனால், அவர் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் அமர்ந்து இருந்தும் பட்டம் பெற முன்வரவில்லை. இதனால் மீண்டும் மீண்டும் அவரை அழைத்தும் அவர் பட்டம் பெற செல்ல மறுத்துவிட்டார். இதன் பிறகு மற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
விழா முடிந்ததும் துணை வேந்தர் பொன்னவைக்கோ, பட்டம் பெற மறுத்த மாணவி சுமதியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தனது மனதை மிகவும் பாதித்து உள்ளதாகவும், அதனால் தான் பட்டம் பெற விரும்பவில்லை என்று மாணவி சுமதி கூறினார்.
இதனையடுத்து, மாணவி சுமதியை சமாதானம் செய்த பொன்னவைக்கோ அந்த மாணவிக்கு பட்டம் வழங்கினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications