லஞ்ச ஏட்டுக்களுக்கு கட்டாய ஓய்வு-எஸ்பி அதிரடி
கொடைக்கானல்: லஞ்சம் வாங்கிய இரண்டு ஏட்டுகளுக்கு திண்டுக்கல் எஸ்பி கட்டாய ஓய்வு கொடுத்துள்ளார். இம்முடிவு அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு பணியில் இருந்த போலீசார் சேகர், மற்றும் ரவி ஆகியோர் கட்டாயமாக லஞ்சம் தர வேண்டும் என்று அவரை வற்புறுத்தியுள்ளனர்.
இதை அவர்களுக்கு தெரியாமல் சுப்பரமணியம் வீடியோ பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார். இதனைக் கண்ட உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து லஞ்சம் வாங்கிய சேகர் மற்றும் ரவி ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அப்போது, பணிக்கு முறையாக வராதது, குற்றவாளி ஒருவரை சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்தது, லஞ்சம் வாங்கியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மீண்டும் ஆளானார்கள்.
இதனால், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து திண்டுக்கல் எஸ்பி பாரி அதிரடி விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில் அந்த இருவரும் காவல்துறை பணிக்கு களங்களம் விளைவித்தது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, சேகர், ரவி ஆகிய இரண்டு பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி எஸ்.பி. பாரி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications