தேர்தலுக்கு 10,000 போலீசார்-திருச்சி டிஐஜி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று திருச்சி டிஐஜி பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி சரக டிஐஜி பாலசுப்பிரமணி பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்சி மத்திய மண்டலத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர் தொகுதிகளில் பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறிப்பட்டுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் 75 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குசாவடிகளும், சாதாரண நிலையினைக் காட்டிலும் கூடுதலாக வாக்குபதிவு நடைபெற்றவைகள் பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளாக கணகிடப்பட்டுள்ளது.
வன்முறையின்றி அமைதியான முறையில் தேர்தல் நடத்த அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications