பணவீக்கம்: பயம் வேண்டாம்! - பிரதமர்
டெல்லி: பணவீக்கம் பூஜ்யத்தை நோக்கிச் செல்வதை எண்ணி பயப்பட வேண்டாம். இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 7 மாதங்களில் சரிவிலிருந்து மீண்டுவிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு மன்மோகன் சிங் கூறுகையில் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
பணவீக்கம் பூஜ்யத்தை நோக்கிச் செல்வது குறித்து பயப்படவேண்டும். இது மக்களை பாதிக்காது. நாட்டில் பல தரப்பு மக்களின் வருமானமும் உயரத் தொடங்கியுள்ளது பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிதான்.
இதற்குக் காரணம் மத்திய அரசு அறிவித்த பொருளாதார சலுகையின் பலன்கள்தான். பணவீக்கம் முழுமையாகக் குறைந்துவிட்டது. பொருளாதார நிலை அடுத்த ஆறு முதல் 7 மாதங்களில் மீட்சியடையும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டுள்ளது.
இன்னும் மத்திய அரசு அறிவித்து பல சலுகைகளின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் போது நாட்டின் பொருளாதாரம் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
விவசாயிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பலனும் இன்னும் சில வாரங்களிலேயே தெரிந்துவிடும்.
ஏழைகள் மற்றும் மத்தியதர மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக சிமென்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்னும்கூட இந்த விலைகளைக் குறைக்கும் திட்டமுள்ளது.
நாட்டின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாகக் குறைந்துவிடும் என்ற கணிப்புகளை நம்ப வேண்டும். இப்போது 5.3 சதவீததமாக உள்ள வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக உயர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் பிரதமர்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications