ராக்கெட்-வ.கொரியாவுக்கு தெ.கொரியா எச்சரிக்கை
சியோல்: வட கொரியா புதிய ராக்கெட் ஒன்றை செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தென் கொரியா இதன்மூலம் வட கிழக்கு ஆசியாவில் நிலவும் அமைதி சீர்குலைந்துவிடும் என கூறியுள்ளது.
வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திட்டத்தை தயார் செய்து வந்தது. இதன் காரணமாக வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே ஆயுத போட்டி உருவாகி, அங்கு அமைதி குலைந்துவிடும் என அச்சம் கொண்ட ஐநா சபை, வட கொரியா ஏவுகணை சோதனை நடத்த கடந்த 2006ம் ஆண்டு தடை விதித்தது.
இந்நிலையில் வட கொரியா வரும் ஏப்ரல் 4 அல்லது 8ம் தேதிக்குள் தாங்கள் விண்வெளிக்கு தகவல் தொடர்பு செயற்கை கோள் ஒன்றை அனுப்ப போவதாக கூறியுள்ளது.
செயற்கை கோள் ஏவுவதும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை செய்வது என இரண்டும் கிட்டதட்ட ஒன்று தான் என்பதால், வட கொரியா இப்படி மாற்று வழி மூலம் ஏவுகணை சோதனை செய்ய முயற்சிப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இது குறித்து தென் கொரிய ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வான் டே ஜே கூறுகையில், வட கொரியா தங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை புறக்கணித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இது வடகிழக்கு ஆசியா மற்றும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை சீர்குலைத்துவிடும். இதனால் வட கொரியா தனது சோதனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறுகையில், வட கொரியா ஏவுகணை சோதனைக்கு சமமான சோதனை செய்வது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவு அபாயகரமானது என்றார்.
இந்நிலையில் வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் கொரியா தனது கூட்டு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு எங்களது முன்னேற்றத்தை தடுக்க பார்க்கிறது. விண்வெளி என்பது ஒரு சில நாட்டுகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றார்.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications