பிரச்சாரம்-விபத்தில் ஜூனியர் என்டிஆர் படுகாயம்!

அவரது கை, கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் காரில் வந்த நடிகர்கள் ராஜீவ் கனகலா, சீனிவாஸ் ரெட்டி ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.
கம்மம் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நல்கொண்டாவின் சூர்யாபேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
காயமடைந்த அனைவரையும், சூர்யாபேட் லைப்லைன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதித்தனர். தேவையான அவசர அறுவைச் சிகிச்சைகளையும் செய்துள்ளனர்.
ஜூனியர் என்டிஆருக்கு மார்பு, வலது கண், நெற்றி, தலைப்பகுதி, தோள்பட்டை, கைகள் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதங்களுக்கு அவர் முழுமையான சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தாக வேண்டும் என்று நிருபர்களிடம் தெரிவித்தனர் மருத்துவர்கள்.
தகவலறிந்ததும், ஜூனியர் என்டிஆரின் தந்தையும் என்டிஆரின் மகனுமான ஹரிகிருஷ்ணா, சித்தப்பாக்கள் பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர்.
ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கலை ஆதரித்து சாலையோர பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார் ஜூனியர் என்டிஆர். அவலர் போகுமிடமெல்லாம் பெரும் மக்கள் வெள்ளம் கூடியது.
இன்று தெலுங்கு புதுவருடப் பிறப்பு என்பதால், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார் ஜூனியர் என்டிஆர்.
தீவிர பிரச்சாரத்தால் அவர் மிகவும் களைத்துப் போய் காணப்பட்டதால், வண்டியை ஓட்ட வேண்டாம் என கம்மம் தொகுதி வேட்பாளர் கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதையும் மீறி, தானே ஓட்டிக் கொண்டு போவதாகக் கூறிவிட்டாராம் என்டிஆர்.
மேலும் தனது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வம்சி மோகனுக்கு கட்சியில் எம்பி டிக்கெட் மறுக்கப்பட்டதால் மனச் சோர்வு அடைந்திருந்தாராம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications