வருணை கைது செய்ய திருமாவளவன் கோரிக்கை
சென்னை: சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியிருக்கம் வருண் காந்தியை கைது செய்ய வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
பாஜக கட்சி வேட்பாளர் வருண் காந்தியின் தேர்தல் பிரச்சார பேச்சு சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாக இருக்கிறது. இது அமைதி விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நேரு குடும்பத்துக்கு இழுக்கு...
வருண் காந்தியின் இந்த போக்கை பாஜகவும், அவரது தாயாரும் தட்டி கொடுத்து வளர்த்து வருகின்றனர். அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என உடனடியாக அறிவிக்க வேண்டும். உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும். ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்த வந்த ஒருவர் பேசியிருப்பது, நேருவின் குடும்பத்துக்கு இழுக்கை தேடி தந்துள்ளது.
மதவாத சக்திகளை முறியடியுங்கள்...
தமிழகத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையை துருப்பு சீட்டாக வைத்து ஜெயலலிதா அரசியல் ஆதயம் தேடப்பார்க்கிறார். கச்சத்தீவை புனித பகுதியாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜெயலலிதா ஏன் ராமர் பாலத்தை பாஜக புனித பகுதியாக அறிவிப்போம் என அறிக்கைவிட்ட போது எதிர்க்கவில்லை. பாஜகவை ஏன் கண்டிக்கவில்லை.
அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் மதவெறி போக்கை கடைப்பிடிக்கின்றன என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இஸ்லாமிய், கிறிஸ்தவ மற்ற சிறுபான்மை மக்களும் இதர ஜனநாயக சக்திகளும் விழிப்பாக இருந்து இவர்களை முறியடிக்க வேண்டும் என்றார் திருமா.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications