திருமா தாழ்த்தப்பட்டோருக்கு உழைக்கவில்லை-பிரிசில்லா
நெல்லை: திருமாவளவன் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை என ஜான்பாண்டியனின் மனைவியும்,தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளருமான பிரிசில்லா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும் கட்சியாக தமிழக மக்கள் முன்னேற்றம் கழகம் உள்ளது.
பாமக உருவான போது தென்மாவட்டங்களில் பாமகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தோம். எங்கள் கட்சியை வைத்து வளர்ந்த பாமக இன்று தேவேந்திரகுல மக்களை புறக்கணித்து விட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுமொத்த பிரதிநிதியாக தங்களை அடையாளம் காட்டி கொள்ளும் திருமாவளவன் போன்றவர்கள் அந்த மக்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை. அவர்களின் அடிப்படை பொருளாதார நிலை உயரவில்லை. தலித் மக்களுக்கு உண்மையாக பாடுபட்டு வருவது தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மட்டுமே என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications