சேலத்தில் அடித்து உருண்ட பெண் காவலர்கள்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே மகளிர் சிறையில் இரண்டு பெண் போலீசார் பணி நேரத்தில் அடித்து உருண்டு சண்டை போட்டனர்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மகளிர் சிறையில் சரஸ்வதி, ஜெயமணி என இரண்டு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரது வீடும் அஸ்தம்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருக்கிறது.

ஜெயமணிக்கு திருமணம் ஆகவில்லை. சரஸ்வதி தனது கணவருடன் வசித்து வருகிறார். அவர் தினமும் பணிக்கு சைக்கிள் வருவார்.

இந்நிலையில் நேற்று முன்தினமும் மாலையில் சரஸ்வதி தனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. இதனால் சைக்கிளை எனது வீட்டில் கொடுத்துவிடு என ஜெயமணியிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து ஜெயமணி, சரஸ்வதியின் சைக்கிளுடன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஜெயமணியும் சரஸ்வதியின் கணவரும் 'கட்டிப்பிடி வைத்தியம்' பார்த்ததாகத் தெரிகிறது.

இதையறிந்த சரஸ்வதி நேற்று மாலையில் பணி நேரத்தில் நீ என் புருஷனை மயக்கிவிட்டாய் என சண்டை போட்டுள்ளார். இதையடுத்து கோபம் கொண்ட ஜெயமணி உன் புருஷன் தான் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.

வாய்ச்சண்டை சிறிது நேரத்தில் பெரிதாவதை கண்ட மற்ற பெண் காவலர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். இருவரும் இது குறித்து சிறை சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர் இருவரிடமும் விசாரணை செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+