இந்தோனேசியா: அணை உடைந்து 'மினி சுனாமி'-50 பேர் பலி

நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த மினி சுனாமித் தாக்குதல் நடந்துள்ளது.
அணை உடைந்ததால் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் சீறிப் பாய்ந்து வந்ததால் மக்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இறந்த அனைவரும் தெற்கு ஜகார்தாவில் உள்ள சிரென்டு என்ற தொழிற்பேட்டை பகுதயைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் நான்கு பேர் சிறார்கள்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீறிப் பாய்ந்து வந்த தண்ணீருக்கு யாரும் தப்பியிருக்க முடியாது என்று அஞ்சப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மினி சுனாமியைப் போல இது காணப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அணை உடைவதற்கு முன்பு அப்பகுதியில் கன மழை பெய்துள்ளது. பலத்த காற்றும் வீசியது. ஏராளமான மரங்கள் பெயர்த்து எறியப்பட்டன. அப்போது அதிகாலை என்பதால் மக்கள் அனைவரும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். அணை உடைந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.
20 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில், மீட்பு மற்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பலரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications